100 ஆண்டுகளாக இல்லாத கனமழை :வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலியா
3 நாட்களாக விடாமல் பெய்த மழையால் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி வரும் பெருமழையால் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நகரங்கள் முழுவதும் தண்ணீரில் மிதக்கின்றன.
மேற்கு சிட்னி நகரத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற உத்தரவிட்டிருக்கும் மாநில அரசு, 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடவும் ஆணை பிறக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்டுள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் முக்கிய நகரங்களை வெள்ள நீர் தற்போது சூழ்ந்திருக்கிறது.
ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் சாலை வழி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் சிட்னி நிர்வாகம் பொதுமக்களிடம் கூறியுள்ளது. தற்போது வெள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம்அறிவித்திருப்பது சிட்னி, கெம்ஸி நகர மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.