77 ஆண்டுகால சாதனை முறியடிப்பு - மாஸ் காட்டும் இந்திய கிரிக்கெட் அணி
77 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.
பார்டர் – கவாஸ்கர் தொடர்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.
பெர்த் மைதானத்தில் நேற்று( 22.11.2024) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
17 விக்கெட்
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பண்ட் 37 ரன்களையும் குவித்தனர். 150 ரன்கள் குவித்த இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதுவே ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக முதல் இன்னிங்ஸில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.
மேலும், பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்திய அணி 10 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளையும் இன்று முதல் நாளில் இழந்துள்ளது. கடைசியாக 1952 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான சிட்னி டெஸ்டில் இது நடந்தது.