மீண்டும் வரும் டைட்டானிக் 2; அதே கப்பலை கட்டமைக்கும் கோடீஸ்வரர் - யார் தெரியுமா?
டைட்டானிக் கப்பலை நவீன வசதிகளுடன் மீண்டும் கட்டமைக்க கோடீஸ்வரர் ஒருவர் தயாராகி வருகிறார்.
டைட்டானிக் கப்பல்
உலகின் மிகப்பெரும் கப்பலான டைட்டானிக் கப்பல், 1912 ஏப்ரல் 15 அன்று பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் சுமார் 1500 உயிர்கள் பலியாயின.
ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்வையிட சாகச சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்கத்தொழில் கோடீஸ்வரரான கிளைவ் பால்மர் என்பவர் டைட்டானிக் கப்பலின் பிரதியை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த 2012-ம் ஆண்டு முதல் முனைந்து வருகிறார்.
கிளைவ் பால்மர்
இதன்படி, அடுத்தாண்டு தொடங்கும் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்று 2027-ல் கடலில் மிதக்க டைட்டானிக்-2 தாயாராகி வருகிறது.
ஒன்பது அடுக்குகள், 835 கேபின்களுடன் 2,345 பயணிகளுக்கான நவீன வசதிகளுடன் புதிய கப்பல் கட்டமைக்கப்படுகிறது. இவற்றில் ஏறக்குறைய பாதி அறைகள் முதல் வகுப்பு பயணிகளுக்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கப்பலின் பயணம் 1912-ம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்ஆம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கிய டைட்டானிக்கின் அசல் வழியைக் கண்டறியும் என பால்மர் தெரிவித்துள்ளார்.