டைட்டானிக் கப்பல் இப்போ எப்படி இருக்கு...வெளியான வீடியோ

By Thahir Sep 02, 2022 06:05 AM GMT
Report

110 ஆண்டுகளுக்கு முன்பு வடக்க அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் முழ்கிய டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் 8K Ultra HD தரத்தில் அதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலை 

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட இரவில் டைட்டானிக் கப்பல் புறப்பட்ட 3 மணி நேரத்தில் பனிப்பாறை மீது மோதி கடலில் முழ்கியது.

டைட்டானிக் கப்பல் இப்போ எப்படி இருக்கு...வெளியான வீடியோ | The Current Status Of The Titanic

இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பின்னரும் மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்படுகிறது.

சர்வதேச ஆல்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட நீர்முழ்கி பயணங்களின் போது ஆழ்கடலில் முழ்கி சிதைந்து கிடக்கும் அந்த கப்பலின் 200 பவுண்ட் நங்கூரம் சங்கிலி, ஒற்றை முனை கொதிகலன் உள்ளிட்ட பாகங்கள் குறித்த வீடியோ காட்சிகளை படம் பிடித்துள்ளனர்.