இரண்டாவது கட்டம்.. மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸி. வீரர் - உருக்கமான Video!
தனக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்
கேமரூன் கிரீன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக இருப்பவர் 'கேமரூன் கிரீன்'. இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் இடம்பெறவில்லை. இந்நிலையில் தனக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேமரூன் கிரீன் கூறியதாவது " நான் பிறந்தபோது எனக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருக்கும் என மருத்துவர்கள் எனது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். நான் 12 வயது வரை மட்டுமே உயிருடன் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்கள்.
இரண்டாவது கட்டம்
இந்த சிறுநீரக நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாது. இந்த நாள்பட்ட சிறுநீரக நோய் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனது சிறுநீரக பாதிப்பு இரண்டாவது கட்டத்தில் உள்ளது. எனக்கு சிறிது அதிர்ஷ்டம் இருக்கிறது என நினைக்கிறேன். நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்வார்கள்.
ஆனால், நான் உடல்ரீதியாக பெரிய அளவிலான சிரமங்களை சந்திக்கவில்லை. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் அவற்றை பழைய நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது. சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.
Cameron Green has chronic kidney disease.
— 7Cricket (@7Cricket) December 14, 2023
There are five stages to it, with the fifth stage requiring a transplant or dialysis.
This is how Green - currently at stage two - manages the condition every day... pic.twitter.com/ikbIntapdy