இந்த நாட்டில் இனி வெளிநாட்டினர் வீடு வாங்க முடியாது - ஏன் தெரியுமா?
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
மேலும், வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
வீடு வாங்க தடை
எனவே, சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் அதிகமாக அங்கு வீடுகளை வாங்கிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.
அதன்படி, வருகிற 2027-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.