ஸ்கூல் லீவு: பணத்துக்காக சிறுமியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அத்தை - கதறிய தந்தை!
சிறுமியை அவரது அத்தை பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னை ஓஎம்ஆர் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகள் 16 வயது சிறுமி. அதே பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
தொடர்ந்து பள்ளி விடுமுறையில் மாணவியை அவரது தந்தை தனது தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற மாணவியை அவரது அத்தை பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.
அத்தை கொடூரச் செயல்
அதற்கு சிறுமி மறுக்கவே மிரட்டி முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் பெற்றுக் கொண்டு கோயம்பேடு அழைத்துச் சென்று அங்கிருந்து வேளச்சேரிக்கு இளைஞர் ஒருவருடன் ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். அவர் சிறுமியை 5 நாட்கள் அவரது வீட்டில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அனுப்பியுள்ளார்.
அதனையடுத்து ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நபர்களிடம் மாணவியை அனுப்பி பணம் வாங்கியுள்ளார். உடனே அந்த மானவி பெற்றோரிடம் செல்ல வற்புறுத்தியுள்ளார். வேறு வழியின்றி மாணவியை அவரது வீட்டுக்கு அத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், அங்கு சென்ற மாணவிக்கு உடல்நிலை குன்றியுள்ளது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை மகளிடம் விசாரித்ததில் அவர் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
அதன்பின் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் அத்தையான அந்தப் பெண்ணையும், இதற்கு துணையாக இருந்த மேலும் 2 பெண்களையும் கைது செய்துள்ளனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.