எய்ட்ஸ், கர்ப்பிணிகள்; பல பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய திவ்யா - ஊரை உலுக்கிய சம்பவம்!
பெண் ஒருவர் பல பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் தொழில்
சேலத்தில் பாலியல் தொழில் அதிகமாக நடந்து வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உத்தரவின் பேரில் போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, புரோக்கர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு 20 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சிக்கிய பெண்
இதில் முக்கிய நபராக ஏர்வாடி பகுதியை சேர்ந்த தியாகராஜன், பொன்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா(36) என்பவர் சிக்கியுள்ளனர். இவரது கணவர் மாநகராட்சி ஊழியராக உள்ளார். இவர்கள் காசக்காரனூர் பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளனர்.
திவ்யா ஓமலூர் சுகாதாரத்துறையின் கீழ் அரசு மருத்துவமனைகளில் இயங்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் தற்காலிக ஆலோசாகராக பணி புரிந்து வந்துள்ளார். மேலும், எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு, பொதுவாகவே, ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் அதற்கான மருந்துகளையும் அளித்து வந்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களும் இந்த மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அவர்களையும் பேசி வலையில் விழ வைத்துள்ளார். இப்படி ஏராளமான பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார்.
இதில் சம்பாதித்த பணத்தை வைத்து ஏராள சொத்துக்களை குவித்துள்ளார். இவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.