தனிப்பட்ட வாழ்க்கையில் தத்தளிக்கப்போகும் ராசிகாரர்கள் - இந்த மாதம் காத்திருக்கும் சம்பவம்!
ஆகஸ்ட் மாதத்தில் சிரமமான பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் பற்றி பார்க்கலாம்.
வாழ்க்கை
இந்த ஆண்டு தொடங்கி 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் பிறக்க உள்ளது. புதிதாக தொடங்க உள்ள இந்த மாதத்தில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தையும் ஒரு சில ராசிகள் அசுப பலன்களையும் பெறப்போகின்றன.நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவதுண்டு.
இந்த இடமாற்றத்தை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதை பொறுத்து இந்த மாதத்தில் ஒரு சில ராசிகள் சிரமமான பலன்களை அனுபவிக்கப் போகின்றன. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் உள்ளிட்டவற்றில் சில சிக்கல்களை காணப்போகின்றனர்.
கடக ராசி
இந்த மாதத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடலில் அதிகம் சோர்வடையும். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும். உங்களை சுற்றியுள்ளவர்கள் மீதும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
எந்த முடிவுகள் எடுத்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தடைகள் உங்களுக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசி
பல்வேறு தடைகளில் நீங்கள் சிக்கித் தவிக்க வேண்டிய சூழ்நிலைகள் இந்த மாதம் நேரிடலாம். அதிலிருந்து நீங்கள் புதிய பாடங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தால் நல்லது. அது உங்கள் வாழ்க்கைக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
சிந்தனையை மாற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அதிக தொந்தரவை கொடுக்கும்.
உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. அனைத்து சிக்கல்களும் கொஞ்ச காலத்தில் முடிந்து விடும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் உண்டாக்கும். திருமண வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படும்.
தனுசு ராசி
இந்த மாதம் ஏற்படக்கூடிய சிக்கல்களை புத்திசாலித்தனமாக கையாள்வதில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உங்கள் தற்பெருமை மற்றும் அகங்காரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களில் ஈடுபடக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
தொழில் துறைகளில் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் அமையும். பழிவாங்கும் செயலில் ஈடுபட வேண்டாம். உறவினர்களால் உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். உங்கள் வாழ்க்கை துணையின் மீது சந்தேகம் எழும்ப வாய்ப்புள்ளது. புதிதாக காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(பொறுப்பு துறப்பு - இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை)