தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்.27) விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
இன்றைய நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ. 6,695க்கும், சவரன் ரூ. 53,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ. 93.50க்கும் ஒரு கிலோ ரூ.93,500க்கும் விற்பனையாகிறது.
இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு IBC Tamil
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றொரு பேரழிவு திட்டம்! நிந்தாவூரில் சாரா பதுங்கியிருந்ததாக தகவல் IBC Tamil