நீதிமன்ற வளாகத்தில் மனைவியை சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவன்..!
நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவியை சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
கருத்து வேறுபாடு
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொலே நரசிபுராவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சைத்ரா. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. மான இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், 2 வருடத்திற்கு முன்பு சிவக்குமாருக்கும், சைத்ராவிற்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால், இவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இச்சண்டையில் சிவக்குமார், சைத்ராவை கொடுமையாக தாக்கியுள்ளது. இதனால், சைத்ரா காவல்நிலையத்தில் சிவக்குமார் மீது புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
கழிப்பறைக்கு சென்ற மனைவி
இதனையடுத்து, இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் சன்னராயனபட்னாவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார்கள்.
நீதிமன்றத்தில், 2 குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேர்ந்து வாழ நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். இதை சிவக்குமார் ஏற்றுக்கொண்டு, வெளியே வந்தார் சிவக்குமார். அப்போது, கழிப்பறைக்கு சைத்ரா சென்றிருந்தார்.
கத்தியால் கொடூரமாக தாக்கிய கணவன்
அப்போது, கழிவறைக்கு சென்று சைத்ராவை நெருங்கி அருகில் சென்றார் சிவக்குமார். அப்போது, சிவக்குமார் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைத்ராவின் கழுத்தில் சரமாரியாக குத்தி தாக்கினார். இத்தாக்குதலில் சைத்ராவின் கழுத்து கிழிந்து ரத்தம் கொட்டியது.
தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
இதைப் பார்த்த மகன் கத்தி கூச்சலிட்டார். மகனையும் குத்த முற்பட்டபோது, இவனது சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
மகனை கத்தியால் சிவக்குமார் குத்த முயற்சி செய்த போது, பொதுமக்கள் சிவகுமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். உடனடியாக போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.
மனைவி உயிரிழப்பு
ரத்த வெள்ளத்தில் இருந்த சைத்ராவை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சைத்ரா சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.