காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சூர்யா தேவி - பதறிப்போன போலீசார்
மணப்பாறை காவல் நிலையம் முன்பு சூர்யா தேவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமர்சனங்களுக்கு பெயர் போனவர்
சினிமா முதல் டிக்டாக் பிரபலங்கள் வரை அனைவரையும் வாய்க்கு வந்தபடி கடுமையாக பேசி பிரபலமானவர் சூர்யா தேவி.
அண்மையில் நடிகை வனிதாவின் 4-வது திருமணமத்தின் போது அவரை விமர்சித்தது. டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவுடன் மோதல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு பேர் போன சூர்யா தேவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
சமூக வலைத்தளங்களில் கெத்து காட்டி வந்த சூர்யாதேவி, காவல்நிலையத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த சூர்யாதேவிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயற்சி
கடந்த 21ம் தேதி மணப்பாறை காவல் நிலையத்தில் கணவர் மருதுபாண்டி மற்றும் தனது சகோதரர் தேவா ஆகியோர் அடித்து துன்புறுத்தியதாக புகார் தெரிவித்தார்.
இந்த குடும்ப பிரச்சனையில் சூர்யாதேவியின் மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார்.
இரு தரப்பினர் அளித்த புகாரையும் போலீசார் விசாரித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஆறுதலாக கூறி சூர்யாதேவியை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக தீக்குளிக்க முயன்றாரா? அல்லது பப்பிளசிட்டிக்காக இது போன்று செய்தாரா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் இணையவாசிகள்