அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் - நடந்தது என்ன?
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.
ஆர்.பி.உதயகுமார்
மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள அத்திபட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை முடித்துவிட்டு அவர் திருமங்கலம் நோக்கி காரில் சென்றுள்ளார்.
அவருடன் சில ஆதரவாளர்களும் காரில் ஆர்.பி.உதயகுமாருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவருடைய ஆதரவாளர்களின் கார்களை அமமுக நிர்வாகிகள் வழி மறித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.பி.உதயகுமாருக்கு கண்டனம் தெரிவித்து
நடந்தது என்ன?
கோஷங்கள் எழுப்பி அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் ஆர்.பி.உதயகுமாருடன் வந்த ஆதரவாளர்களின் கார்களையும் நொருக்கி சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தினேஷ்குமார்,
அபினேஷ், விஷ்ணு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, மூவைரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.