மிளகாய் பொடி தூவி மணப்பெண் கடத்தல்; திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்!
காதல் திருமணம் செய்த பெண்ணை மிளகாய் பொடி தூவி உறவினர்கள் கடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
மணப்பெண் கடத்தல்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சினேகா.இவர் நரசராவ்பேட்டையில் படிக்கும் போது வெங்கடானந்து என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணத்திற்கு மணமகன் வீட்டில் சம்மதம் தெரிவித்து மணமக்களை வரவேற்க கிராமத்தில் விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.அப்போது விழாவின் இடையில் திடீரென உள்ளே வந்த சினேகாவின் அம்மா மற்றும் சகோதரர், அறையில் இருந்த சினேகாவை கையை பிடித்து தரதரவென இழுத்து வந்துள்ளனர்.
மிஞ்சிய சம்பவம்
இதனை பார்த்த மணமகன் வீட்டார் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது, மணமகன் வீட்டார் மீது மிளகாய் போடி வீசி கடுமையாக தாக்கியுள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் அதிகரித்து இந்த சம்பவத்தின் தகவலறிந்து வந்த போலீசார் அங்கு விரைந்து வந்தார்.
அவர்களிடம் சினேகா தன் வீட்டார் தன்னை கடத்த முயற்சித்ததாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கடத்தல் முயற்சி, மணப்பெண்ணின் நகை திருட்டு போன்ற சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திரைபடத்தை மிஞ்சும் விதத்தில் மணப்பெண்ணை கடத்த முயன்ற இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி உள்ளது.