பெண்ணை ஆம்புலன்சில் ஊரே சேர்ந்து அடித்த கொடூரம் - கதறிய கணவன், மகன்
ஆம்புலன்சில் இருந்த பெண்ணை ஊரே சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவிழா
கடலூர், சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தீர்த்தவாரி சென்ற சாமி, மீண்டும் ஊர்வலமாக ஊருக்கு திரும்பியுள்ளது. அப்போது சாத்தப்பாடியை சேர்ந்தவர்களுக்கும், மேலமணக்குடியை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர்.
இதில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர் என 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், தங்கள் ஊரை சேர்ந்தவர்களை தாக்கியவர்ளை கைது செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகராறு
இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தி நடத்தி, இரு கிராம மக்களையும் கலைந்து போக செய்தனர். அதில், கணவர், மகன் முன்னிலையில் ஊரில் பலரும் ஆம்புலன்சில் இருந்த பெண்ணை தாக்கி இருக்கிறார்கள்.
மேலும், மோதலில் காயமடைந்து ஆம்புலன்சில் சென்றவர்களை சிலர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.