ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்து, திரிந்து ஆம்புலன்சில் குழந்தை பெற்ற கர்ப்பிணி

Hospital wanted Pregnent women
By Thahir Jan 15, 2022 09:30 PM GMT
Report

ஆந்திராவில் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி இறுதியில் ஆம்புலன்சில் குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.

ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் குடமசிங்கி கிராமத்தில் வசித்து வருபவர் ஹீராமணி (வயது 20). கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து முதலில் பலசா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே இருந்த மருத்துவர்கள், மருத்துவ காரணங்களால் குழந்தை பெறுவது கடினம் என கூறி இளம்பெண்ணை தெக்காளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால், தெக்காளி மருத்துவமனையிலும் கர்ப்பிணியை ஸ்ரீகாகுளத்தில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியுள்ளனர்.

இதனால், ஒவ்வொரு மருத்துவமனையாக அவர் அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், தெக்காளியில் இருந்து ஸ்ரீகாகுளம் செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் திடீரென ஹீராமணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆம்புலன்சில் இருந்தவர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். இதன்பின்பு, தைரியமுடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில் ஹீராமணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர். தாய் மற்றும் சேய் என இருவரும் நலமுடன் உள்ளனர்.