தமிழ்நாட்டு வீரர்கள் மீது கொடூர தாக்குதல்- ராஜஸ்தானில் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!

Tamil nadu Viral Video Rajasthan
By Vidhya Senthil Nov 23, 2024 06:35 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

  ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  வீரர்கள் 

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான இந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டு வீரர்கள் மீது கொடூர தாக்குதல்-

அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம், வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தென் இந்தியாவிலிருந்து 4 அணிகள் சென்றுள்ளன.

அரை நிர்வாணமாக சாலையில் ரகளை - போலீசாரை தாக்கியதால் பரபரப்பு!

அரை நிர்வாணமாக சாலையில் ரகளை - போலீசாரை தாக்கியதால் பரபரப்பு!

இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டு வீரர்களும் ராஜஸ்தான் வீரர்களும் போட்டி நடைபெற்றது.அப்போது போட்டியில் தமிழ்நாட்டு வீரர்களுக்குச் சரியான பாயிண்ட்களும்,போனஸ்களும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தாக்கப்பட்ட சம்பவம்

இதனால் தமிழ்நாட்டு வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதனால் இரு அணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிகளைக் காண வந்த பிரபல நடிகர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் முன்னிலையில்லையே அரங்கில் உள்ள இருக்கைகளைக் கொண்டு,

Attack on Tamil Nadu players in rajasthan

 தமிழ்நாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும் ராஜஸ்தான் வீரர்கள் தாக்கி உள்ளனர்.இதுதொடர்பாக வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் எழுந்து வருகிறது.