ஊருக்குள் புகுந்து பட்டியலின மாணவன் மீது தாக்குதல் - தடுத்த பாட்டிக்கும் வெட்டு!
ஊருக்குள் நுழைந்து பட்டியலின மாணவனை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் தகராறு
கரூர், உப்பிடமங்கலத்தை அருகே பட்டியலினத்தை சேர்ந்த மாணவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென ஊருக்குள் நுழைந்த கும்பல் ஒன்று அந்த மாணவரை விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கியது. தொடர்ந்து, தடுக்க வந்த பாட்டியையும் வெட்டியுள்ளனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த கும்பலை தடுத்து விரட்டியடித்துள்ளனர்.
4 பேர் கைது
அதனையடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், கல்லூரி மாணவர்கள் இருவர் மற்றும் பள்ளி மாணவர்கள் இருவர் 4 பேர் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். புலியூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் வேறு சில மாணவர்களுக்கும்,
இந்த பட்டியலின மாணவருக்கும் பேருந்தில் செல்லும் போது தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.