கழிவறை சுத்தம் செய்த மாணவர்கள் - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!
தலைமை ஆசிரியை, மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கழிவறை சுத்தம்
ஈரோடு, பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவ, மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கு படிக்கும் மாணவன் ஒருவன் காய்ச்சலாம் பாதிக்கப்பட்டுள்ளான். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து விசாரிக்கையில், தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் கூறியுள்ளான்.
ஆசிரியை கைது
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றொர் அதுகுறித்து புகாரளித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இதுபற்றி விசாரணாஇ நடத்த கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, பள்ளியின் தலைமையாசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக தலைமையாசிரியை கீதாராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் விசாரணையில், கழிவறையை தூய்மைப்படுத்த ஆட்கள் இல்லை என்ற காரணத்துக்காக மாணவர்களை, குறிப்பாக பட்டியலின மாணவர்களை அப்பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.