நடுரோட்டில் நடந்த கொடூர செயல் -உளுந்தூர்ப்பேட்டை மக்களுக்கு பறந்த எச்சரிக்கை!
உளுந்தூர் பேட்டையில் சிறுமிகளை கடத்தியதாகக் கருதி இளைஞர்கள் 2 மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார்ப் பள்ளியில் படித்து வந்த இரண்டு சிறுமிகள் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் விசாரித்துள்ளனர். அங்கு இருந்தவர்கள் 2 சிறுமிகளை யாரோ ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் பள்ளிக்கு அருகில் உள்ளே ஷோ அறையில் பழுது பார்க்கவிட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த இளைஞர்கள் 2 பேரைச் சிறுமிகளை கடத்தியதாகக் கருதி பொது மக்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல்
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது விசாரணை மேற்கொண்டதில் அருண், அஜித் என்ற இளைஞர்கள் இரண்டு பெரும் விசலூரை சேர்ந்தவர்கள் என்றும் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர். இவர்களுக்கும் சிறுமிகள் காணாமல் போனதற்கும் எந்தச் சம்மதமும் இல்லையெனத் தெரிவித்தனர்.
மேலும் காணாமல் போனதாகக் கூறப்படும் 2 சிறுமிகள் அவரது பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உளுந்தூர்பேட்டை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.