பிரபல நிகழ்ச்சியில்.. உருவகேலி செய்த தொகுப்பாளர் - அட்லீ திருப்பிக் கொடுத்த பதில்!
உருவ கேலி செய்த தொகுப்பாளருக்கு அட்லீ கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது.
தொகுப்பாளர்
அட்லீ இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் `தெறி'. இந்த படம் மெகாஹிட் ஆன நிலையில், ஏற்கெனவே சில மொழிகளில் ரீமேக் ஆகியிருக்கிறது. இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் டிசம்பர் மாதம் வருகின்ற 25ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தை அட்லீ தயாரிக்க காலீஸ் இயக்கி, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா காபி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கான புரமோஷன் நிகழ்வுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், அட்லீயே பல இடங்களில் சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ஒரு புரமோஷன் நிகழ்வாக, தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் படக்குழுவுடன் அட்லீயும் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் "நீங்கள் ஏதாவது ஸ்டாரை சந்திக்க செல்லும் போது, அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?"
அட்லீ
என அட்லீயின் உருவத்தை கேலி செய்யும் வகையில் கேள்வியை கேட்க அதற்கு அட்லீ கூலாக பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, நான் ஏ ஆர் முருகதாஸ் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். அவர் தான் என்னுடைய முதல் படத்தை தயாரித்தார்.
அவர் என்னிடம் ஸ்க்ரிப்ட்டை தான் கேட்டார். மாறாக அவர் என் தோற்றத்தை பார்க்கவில்லை. நான் கதை சொன்ன விதம் அவருக்குப் பிடித்திருந்தது. இந்த உலகமும் ஒருவரின் தோற்றத்தை வைத்து
அவரை முடிவு செய்யக் கூடாது, அவரின் மனதை பொறுத்து முடிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan
