Tuesday, Apr 29, 2025

தெரியாம அப்படி பண்ணிட்டேன் ...பல வாட்டி ரொம்ப கஷ்டப்பட்டேன்! அதுல்யா ரவி ஓபன் டாக்

Athulya Ravi
By Karthick a year ago
Report

அதுல்யா ரவி

தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் முதலில் யூடியூபில் குறும்படத்தில் நடித்து வந்தார். அதில் காதல் கண் கட்டுதே என்ற குறும்படம் மூலம் பிரபலமானார்.

athulya ravi

அதன்பிறகு இவருக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர், நடிகர் சாந்தனு உடன் சேர்ந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து சினிமாவில் பிரபலமானார், பல ரசிகர்களை கவர்ந்தார்.

ரொம்ப கஷ்டப்பட்டேன் 

இவர் அண்மையில் அளித்த பேட்டியில், சினிமாவிற்கு வந்த புதிதில் எதிர்கொண்ட இன்னல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசியது வருமாறு, சினிமாவில் அறிமுகமான புதிதில் நண்பர்கள் உறவினர்களிடம் படத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறி விட்டேன்.

எனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்..ஆனா அவரு? 2-வது திருமணம் - மவுனம் கலைத்த டிடி

எனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்..ஆனா அவரு? 2-வது திருமணம் - மவுனம் கலைத்த டிடி

ஆனால், படம் வெளியாக பல சிக்கல்கள் ரிலீஸ் தேதி தள்ளி போச்சு. நண்பர்கள் உறவினர்களிடம் இன்று ரிலீசாகும், நாளை ரிலீசாகும் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் ஒருகட்டத்தில் நிஜமாவே நீ படத்தில் நடிச்சியா? இல்ல சும்மா கதைவிடுறியா என்றெல்லாம் கேட்டார்கள்.

athulya ravi

அப்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. பலமுறை படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. நண்பர்கள் அனைவருமே கிண்டலடிக்க துவங்கினார்கள். பிறகு படம் வெளியாகி ஒரு அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் நிம்மதியாகவே இருந்தது, அம்மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றார்.