கே.எல்.ராகுலுக்கு விரைவில் திருமணம்? பாலிவுட் நடிகையுடன் நெருக்கம்!

Cricket KL Rahul Gossip Today Bollywood
By Sumathi Jul 13, 2022 06:01 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்  பாலிவுட் நடிகையை காதலித்து வருவதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கே.எல்.ராகுல். இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

kl rahul

அவர் தற்போது சிகிச்சைக்காக முனீச் சென்றுள்ளார். அவருடன் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் உடன் சென்றுள்ளார்.பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் சுனில் ஷெட்டி.

அதியா ஷெட்டி

இவர் தமிழிலும் ரஜினியின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரின் மகள் தான் அதியா ஷெட்டி. இவரும், கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

athiya shetty

அடிக்கடி ஜோடியாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதாகவும்,

வதந்திக்கு முற்றுப்புள்ளி

இதற்கான ஏற்பாடுகளை அவர்களது குடும்பத்தினர் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.இந்நிலையில், மகளின் திருமண வதந்தி குறித்து பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் குறித்து பரவி வரும் தகவல் எதுவும் உண்மையில்லை என மறுத்துள்ள அவர், அதுகுறித்து இதுவரை எந்தவித ஏற்பாடுகளும் செய்யவில்லை எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கல்யாணம் சின்ன சாப்டர்..அதவிட நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு... காணாமல் சென்ற நடிகை தகவல்!