பிரதமர் மோடி திறந்த அடல் சேது பாலம்..5 மாதத்திலேயே பிளந்துகொண்டதாக குற்றசாட்டு!
இந்தியாவின் மிகவும் நீளமான கடல் பாலத்தில் கீறல் விழுந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடல் சேது பாலம்
இந்தியாவின் மிகவும் நீளமான கடல் பாலத்தில் கீறல் விழுந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இந்திய நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றது. இந்த பாலம், மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது.
ரூ.17,800 கோடி செலவில் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணிகள் சென்ற ஜனவரியில் தான் நிறைவடைந்தது. மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
5 மாதத்திலேயே..
இந்நிலையில், திறக்கப்பட்ட ஐந்தே மாதங்களில் அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சில புகைப்படங்களை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் தந்து சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். இதன் பிறகு அந்த புகைப்படங்கள் படு வைரலானது.
இப்படியாக பலதரப்பினரிடம் இருந்து எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “அடல் சேது பாலத்தை இணைக்கும் சர்வீஸ் சாலையில் தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த சாலை,
பிரதான பாலத்தின் ஒரு பகுதி அல்ல. மேலும் இந்த விரிசல்கள் கட்டுமான குறைபாடுகளால் ஏற்பட்டதல்ல. இவற்றால் பாலத்தின் கட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கீறல் விழுந்த இடத்தை சரி செய்யும் வேலையில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.