ரூ.42 செலுத்தினால் மாதம் 5,000 ரூபாய்.. முதியோர்களுக்கு அசத்தல் பென்ஷன் திட்டம்!
60 வயது மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் திட்டம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதியோர்
மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு போதிய வருமானம் இல்லாமல் நிதி நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்.
அப்படிப்பட்ட மக்களுக்குக் கடந்த 2015 ஆண்டு அடல் ஓய்வூதிய யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட யாராக இருந்தாலும் சேரலாம்.தங்களது வசதிக்கேற்ப மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும்.
பென்ஷன் திட்டம்
60 வயதுக்குப் பிறகு, மாதம் ரூ.1000, 2000, 3000, 4000 அல்லது 5000 வரை ஓய்வூதியமாகப் பெற முடியும். உதாரணத்திற்கு, 18 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து மாதம் ரூ.42 செலுத்தினால் 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெற முடியும்.
அதேபோல், 40 வயதில் சேர்ந்து மாதம் ரூ.1,454 செலுத்தினாலும் ரூ.5,000 ஓய்வூதியம் பெற முடியும். இந்தத் திட்டம் குறிப்பாக விவசாயிகள், தினக்கூலி செய்பவர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.இதனால் 60 வயதிற்குப் பிறகு வருமானத்தை இழக்காமல் இருக்கலாம்.