அமெரிக்க தேர்தலில் வெல்லப்போவது யார்? ஜோ பைடன் விலகலை முன்னரே கூறிய ஜோதிடர் கணிப்பு
ஜோ பைடன் விலகலை கணித்த பிரபல ஜோதிடர் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர்
தேர்தல் வரும் நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு போட்டியிலிருந்து விலக கோரி கட்சியிலிருந்து நெருக்கடி அதிகரித்தது. இதன் பின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கமலா ஹாரிஸ்
இதன் பின் கமலா ஹாரிஸ் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரே நாளில் 81 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ 677 கோடி ஆகும். அமெரிக்கா தேர்தல் பிரச்சார வரலாற்றில் மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக அளவில் தேர்தல் நன்கொடை குவிந்திருப்பது இதுவே முதல் முறை.
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுஅவருக்கு பெரிய அளவில் அனுதாப அலையை உருவாக்கியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.
கணிப்பு
இந்நிலையில் இந்த தேர்தலில் டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என பிரபல ஜோதிடர் எமி ட்ரிப் கணித்துள்ளார். இவர் ஏற்கனவே ஜோ பைடனுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும், கமலா ஹாரிஸ் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என கடந்த 2020ம் ஆண்டில் கூறியிருந்தார்.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா அரசியலில் வன்முறை ஏற்படும் என கணித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி சார்பில் தேசிய மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.