இது ரொம்ப லேட்..! கோவிட் தடுப்பூசியை திரும்ப பெற்ற நிறுவனம் !!

COVID-19 COVID-19 Vaccine
By Karthick May 08, 2024 03:11 AM GMT
Report

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி.

திரும்பப்பெறுகிறோம்

அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அஸ்ட்ராஜெனெகா நிறுவனமா COVID-19 தடுப்பூசியை உலகளவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.

astrazeneca withdraws covid vaccine globally

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, கோவிஷீல்டாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் தயாரிக்கப்பட்டது.

பயன்படுத்த முடியாது


COVID-19 க்கான புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் கிடைப்பதால் வணிக காரணங்களுக்காக திரும்பப் பெறுதல் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றின் புதிய மாறுபாடுகளைச் சமாளிக்கும் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளால் இந்த முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் பாதுகாப்பானதா? பாரத் பயோடெக் விளக்கம்!

கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் பாதுகாப்பானதா? பாரத் பயோடெக் விளக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தானாக முன்வந்து அதன் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

astrazeneca withdraws covid vaccine globally

அதே போல மேலும், தடுப்பூசி தயாரிபோக்கும் இனி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியைப் பயன்படுத்தி வரும் மற்ற நாடுகளிலும் இதே போன்ற திரும்பப் பெறப்படும்.