ஹிரோஷிமா நினைவிருக்கா? அதைவிட விட 500 மடங்கு அதிகம் -பேரழிவை ஏற்படுத்தும் சிறுகோள்!
பூமியை நெருங்கும் சிறுகோள் ஒன்று மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகோள்
உலக அழிவு குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.அப்படி ஆராய்ச்சி செய்யப்பட்டத்தில் ஆஸ்டிராய்டு 2024 YR4' என்ற சிறுகோள் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி நெருங்கி வருவதாகவும், இது சுமார் 100 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது டிசம்பர் 2032 ஆண்டும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் போது மோத வாய்ப்பு உள்ளது. இப்படி நிகழ்ந்தால் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை மோதினால் பூமியில் உள்ள எந்தெந்த பகுதியில் அழிய வாய்ப்பு உள்ளதா?என்ற கேள்வி நம் மனத்தில் எழும்.
பேரழிவு?
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எத்தியோப்பியா, சூடான், நைஜீரியா, வெனிசுலா, கொலம்பியா மற்றும் ஈக்வடார் உள்ளிட்ட பகுதிகளில் மோதக்கூடும் என்று சொல்லப்படுகிறது.இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட 500 மடங்கு அதிக அழிவுவாக இருக்கும்
முன்னதாக 2029ஆம் ஆண்டு அபோஃபிஸ்' என்ற சிறுகோள் பூமியுடன் மோதும் என்று கூறப்பட்டது. அது பூமிக்கு மிக அருகில் செல்லும், ஆனால் தாக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க Manithan
