முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை!
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைத்திலிங்கம்
கடந்த 2011-16 வரையிலான காலகட்டத்தில் அதிமுகவில் தமிழகத்தின் வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஆர். வைத்திலிங்கம் பொறுப்பு வகித்து வந்தார். அப்போது அமைச்சராக இருந்தபோது ரூ.33 கோடி வருமானத்திற்கு அதிகமாக (1058சதவிதம் அதிகம்) சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டி எழுந்தது
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மட்டுமில்லாது அவரது இரண்டு மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
அதன்படி ,அதிகாலை முதல் தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அவரது வீடு சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் அறை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத் துறை
இதில் 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அடுக்குமாடிக் குடியிருப்பு அனுமதிக்கு ரூ. 28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.