பரந்தூரில் திடீர் சந்திப்பு .. இதுதான் விஜய்யின் நோக்கம் - அப்பாவு பரபரப்பு பேட்டி!
விஜய்யைக் கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
விஜய்
பிஹாரில் மாநில சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ் நாட்டுச் சார்பில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாகத் தமிழக சட்டசபையில் நடந்து கொண்டது தொடர்பாகவும், மாநிலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஆளுநர்கள் செயல்படக்கூடாது எனவும் வலியுறுத்திப் பேசினேன் என்று கூறினார். தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து கேள்வி எழுதப்பட்டது.
அதற்கு அந்த பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் போராட்டகள்த்தில் மக்களைச் சந்தித்துள்ளார்.அப்போது பேசிய அவர் எனக்கு இங்கு வர அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
அப்பாவு
இது குறித்த கேள்விக்கு விஜய்யைக் கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு சிலர் செயல்பட நினைக்கிறார்கள் என்று கூறினார். மேலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு தெளிவாகத் தெரிவித்துள்ளது.
நீங்கள் சொல்லும் நபர் (விஜய்) திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தவே அனுமதிக்கப்பட்டது. ஆனால் அவர் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.