கணவர், மாமியாரைக் கொன்று ஃப்ரிட்ஜில் வைத்த பெண் - காதலன் உதவி!
பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரை கொலை செய்து உடலை ஃப்ரிட்ஜில் வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
அஸ்ஸாம், கவுகாத்தியைச் சேர்ந்தவர் வந்தனா கலிதா. இவரது கணவர் அமர்ஜோதி டே. இந்தப் பெண் திருமணமான நிலையில் வேறொரு நபருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த கணவர் மற்றும் மாமியார் சங்கரி டே மருமகளை கண்டித்துள்ளனர்.
இதனால் அந்தப் பெண் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது கள்ளக் காதலன் உதவியுடன் கணவர் மற்றும் மாமியாரைக் கொலை செய்துள்ளார். பின்னர் உடல் உறுப்புகளில் துர்நாற்றம் வராமல் இருக்க அவர்களது உடலை துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் வைத்துள்ளார்.
கொலை
மூன்று நாட்களுக்குப் பிறகு, வந்தனா கலிதாவும் அவரது காதலரும் உடல் உறுப்புகளை குவஹாத்தியில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள மேகாலயாவின் சிரபுஞ்சிக்கு எடுத்துச் சென்று உடல் உறுப்புகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்த புகாரில் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.