திருட வந்த துணிக்கடையில் பொம்மையிடம் சில்மிஷம் - சிசிடிவி காட்சிகளால் அதிர்ந்த போலீஸார்!

Tamil nadu Crime
By Sumathi Jul 15, 2022 05:55 AM GMT
Report

நாகர்கோவிலில் உள்ள ஒரு துணிக்கடையில் திருட வந்த வாலிபர் பொம்மையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காட்சியை கண்காணிப்பு கேமராவில் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

திருட வந்த வாலிபர் 

குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்தவர் ஜோசப் பெவின்(39). இவர் தற்போது நாகர்கோவில் குருசடி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

திருட வந்த துணிக்கடையில் பொம்மையிடம் சில்மிஷம் - சிசிடிவி காட்சிகளால் அதிர்ந்த போலீஸார்! | Assailant Made Fun Of The Toy At He Came To Steal

செட்டிகுளம் பகுதியில் சொந்தமாக துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வழக்கம் போல் ஜோசப் பெவின் கடையை திறந்து உள்ளே சென்ற போது துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

துணிக்கடை

மேலும் அங்கிருந்த சில துணிகளும் திருடு போய் இருந்தன. இதுபற்றி ஜோசப் பெவின் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடை முழுவதும் சோதனை நடத்தினர்.

திருட வந்த துணிக்கடையில் பொம்மையிடம் சில்மிஷம் - சிசிடிவி காட்சிகளால் அதிர்ந்த போலீஸார்! | Assailant Made Fun Of The Toy At He Came To Steal

அப்போது கடையின் மேல்பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டனர். இதனால் அதன் வழியாக வந்த மர்மஆசாமி துணிகளை திருடியிருக்கலாம் என கருதினர்.

 பொம்மையிடம் சில்மிஷம்

இதனையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளை கண்டதும் போலீசார் அதிர்ந்து போனார்கள்.

அதில், கடைக்குள் நுழைந்த ஆசாமி பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தார். பின்னர் அங்கிருந்த 2 பொம்மைகளின் ஆடைகளை கழற்றினார். தொடர்ந்து அந்த ஆசாமியும் நிர்வாண நிலைக்கு சென்று பொம்மையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

 சிசிடிவி காட்சிகள்

இந்த அருவருப்பான காட்சியை வைத்து பார்க்கும் போது ஆசாமி காமக்கொடூரனாக இருப்பானோ என ேபாலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே வேறு ஏதேனும் விபரீத செயல் அந்த ஆசாமியால் நடப்பதற்கு முன்பு அவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.