சென்னை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து..சிக்கிய பிரபல நடிகர்

Accident Fire Business Chennai Complex Trapped actor
By Thahir Feb 06, 2022 12:11 PM GMT
Report

சென்னை தி.நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிட வளகத்தில் சிக்கிய 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தனியார் வங்கி, துணிக்கடை, நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

சென்னை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து..சிக்கிய பிரபல நடிகர் | Chennai Fire Accident Business Complex

இந்நிலையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, அப்போது வளாகத்துக்குள் இருந்த 50 பேர் சிக்கி கொண்டனர் .

கடைக்குள் இருந்த பெரும்பாலனோர் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 1 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்த தீ விபத்தில் சிக்கி கொண்ட விக்ரம் படத்தில் நடித்து வரும் ஸ்ரீ தனது குடும்பத்தினருடன் சிக்கி கொண்டார்.

சென்னை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து..சிக்கிய பிரபல நடிகர் | Chennai Fire Accident Business Complex

பின்பு அவரை பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை.