Asian Games: கபடியில் தங்கம் வென்ற மகளிர் அணி - 100 பதக்கங்களை தொட்டு இந்தியா வரலாற்று சாதனை!
ஆசிய விளையாட்டு போட்டியில் 100வது பதக்கத்தை வென்றுள்ளது இந்தியா.
ஆசிய விளையாட்டு
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. போட்டியின் முடிவில் இந்தியா 26 புள்ளிகளை பெற்றது, சீன தைபே அணி 25 புள்ளிகளை எடுத்திருந்தது. இதனால் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது.
100வது பதக்கம்
இதுவே நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றுள்ள 100-வது பதக்கம் ஆகும். இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கல பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
மேலும் இன்றைய தினம் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் மற்றும் ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா மேலும் 2 பதக்கம் வெல்லும்.