கிளம்புங்க., பாதியிலேயே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய வீரர்!
இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சஞ்சு சாம்சன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
கே எல் ராகுல் காயம்
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்று ஆடி வருகிறது. அதில், சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராக அணியில் இடம் பெற்றார். ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதில் பயன்படுத்தப்படுவார்கள்.
கே எல் ராகுல் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அணியில் இடம் பெறவில்லை. முன்னதாகவே ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். முதல் சில போட்டிகளில் அவர் பங்கேற்கவும் இல்லை.
ரிசர்வ் வீரர்
அப்போது அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தார். அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கே எல் ராகுல் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து அணியில் இணைந்து விட்டார்.
செப்டம்பர் 10 அன்று நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, தற்போது பிசிசிஐ சஞ்சு சாம்சன் இனி அணியில் மாற்று வீரராக இடம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது.