திடீரென தோனி குறித்து உருகிய விராட் கோலி - என்னவா இருக்கும்..குழப்பத்தில் ரசிகர்கள்!
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, தோனி பற்றி பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி, கடந்த சில ஆண்டுகளாகவே ரன் அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால், கோலியை ஓய்வு பெற வேண்டும் என பல விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபக்கம் அதே அளவுக்கு ஆதரவுகளும் பெருகி வந்தன.
மீண்டும் இந்திய அணியில், அவர் நன்றாக ஆட வேண்டும் என, ரசிகர்கள் எண்ணிய நிலையில், அவரும் அதற்காக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி அதாவது நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற உள்ளது.
தோனியுடன் பார்ட்னர்ஷிப்
இந்த தொடருக்காக இந்திய அணி தீவிர பயிற்சியை துபாயில் மேற்கொண்டு வருகின்றனர். விராட் கோலியும் நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால், அவரின் மீதான எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
எனவே ஆசியகோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினால் மட்டுனே டி20 அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், விராட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
உருக்கமான பதிவு
அதில், “தோனியுடன் மிகவும் நம்பிக்கை துணைக்கேப்டனாக பணியாற்றிய காலங்கள் எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள். மேலும், தோனியும், நானும் அமைத்த பார்ட்னர்ஷிப்கள் தான் என்றுமே எனக்கு மிக ஸ்பெஷலான ஒன்று என 7+18” என பதிவிட்டுள்ளார்.
தோனி இருந்த தருணத்தில் விராட் கோலி புகழின் உச்சத்தில் நல்ல பேட்டிங்கையும் வெளிப்படுத்தி வந்தார். அவரும் அதற்கு உறுதுணையாக இருந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப் அதிகப்படியான வெற்றிகளை தேடி தந்துள்ளது.
இந்த தருணத்தில் தோனியை நினைத்து விராட் கோலி ஏன் இப்படி ஒரு பதிவை வெளியிட்டார் என ரசிகர்கள் குழம்பினாலும், அவருடன் இருந்த நேரத்தில் இவர் மன அழுத்தம் இல்லாமல் விளையாடினார் எனவும் நெட்டிசன்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.