ஐசிசி தரவரிசை: மீண்டும் இவர்தான் முதலிடம் - கோலி முன்னேற்றம்!

Sumathi
in கிரிக்கெட்Report this article
ஐசிசி தரவரிசை பட்டியலில் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி தரவரிசை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 13ஆம் தேதி அகமதாபாத்தில் முடிவடைந்த 4வது பேட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சுழற்பந்து வீச்சாளரான விச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.
கவாஸ்கர் டிராபிக்கான 25 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் அடிப்படையில் ஐசிசி டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அஸ்வின் 869 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
அஸ்வின் முதலிடம்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 841 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார். அக்சர் படேல் 6 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 8 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை அடைந்துள்ளார். சதம் விளாசிய ஷுப்மன் கில்17 இடங்கள் முன்னேறி 46-வது இடத்தை பெற்றுள்ளார்.