நான் பார்த்ததிலேயே மிகவும் திறமையான வீரர் அவர்தான் - அஸ்வின் பளீச்!

Ravichandran Ashwin Ravindra Jadeja Indian Cricket Team
By Sumathi Sep 02, 2024 02:30 PM GMT
Report

தாம் பார்த்ததிலேயே திறமை வாய்ந்த வீரர் யார்? என்பது குறித்து அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

அஸ்வின்

2011 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் அஸ்வின். விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரஹானே, புஜாரா போன்ற வீரர்களுடன் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். இந்நிலையில், தாம் பார்த்ததிலேயே சிறந்த திறமை வாய்ந்த வீரர் குறித்து பேசியுள்ளார்.

நான் பார்த்ததிலேயே மிகவும் திறமையான வீரர் அவர்தான் - அஸ்வின் பளீச்! | Ashwin Says Jadeja Is The Most Talented Player

அதில், "நான் பார்த்ததிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என்றால் அது ஜடேஜாதான். ஜடேஜாவுக்கு இயற்கையிலேயே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என்று மூன்று பிரிவிலும் திறமை இருக்கின்றது. நாங்கள் பல ஆண்டுகள் இணைந்து விளையாடியதில் இருந்து எங்களுடைய உறவு முன்னேறியது.

நாங்கள் இருவருமே மிகவும் வித்தியாசமானவர்கள். நாங்கள் இருவரும் புரிந்து கொண்டு பந்து வீச்சில், பார்ட்னர்ஷிப் அமைக்க சிறிது காலம் தேவைப்பட்டது. வெளிநாடுகளில் விளையாடும்போது பிளேயிங் லெவனில் எனக்கு இடம் கிடைக்காது. இருந்தபோதும் எங்கள் இருவருக்கும் எந்த ஒரு உறவில் பாதிப்பும் இல்லை.

இந்திய அணி பாகிஸ்தான் வரக்கூடாது; நோக்கமே இதுதான் - முன்னாள் வீரர் காட்டம்!

இந்திய அணி பாகிஸ்தான் வரக்கூடாது; நோக்கமே இதுதான் - முன்னாள் வீரர் காட்டம்!

திறமை வாய்ந்த வீரர்? 

இது எங்கள் அணியில் உள்ள சிக்கலாக தான் கருதுகிறேன். இதில் ஜடேஜாவின் தவறு எதுவும் கிடையாது. ஜடேஜாவுக்கு நிகராக நான் எவ்வாறு சிறந்து விளங்க முடியும் என்பது குறித்து நான் யோசிக்க வேண்டும். இதற்காக ஜடேஜாவை நான் கடத்தி வீட்டில் வைத்திருக்கவா முடியும்.

ashwin

எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நீங்கள் பொறாமை இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் களத்திற்கு தேவையான வீரர்களைத்தான் தேர்வு செய்ய முடியும். அணியில் 11 வீரர்கள்தான் இருக்க முடியும். நாங்கள் அனைவருமே ஒரே அணிக்காகத்தான் விளையாடுகிறோம். வாய்ப்பு கிடைக்காத வீரர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

எனக்கு அணியில் இடம் வேண்டுமென்றால் நான் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்னால் ஜடேஜா மாதிரி பீல்டிங் செய்ய முடியாது. ஆனால் ஜடேஜாபோல் எப்படி சிறந்து விளங்க வேண்டும் என்பது குறித்து நான் யோசிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.