இந்திய அணிக்கு கேப்டன் ஆகாததற்கு காரணம் இதுதான் - அஸ்வின் கொடுத்த விளக்கம்
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் இன்று(09.01.2025) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அஸ்வின், மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.
இந்திய அணிக்கு கேப்டன்
அதனை தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய அவர், "தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா, ஹிந்தி ஓகே வா என கேட்டார். அதற்கு தமிழுக்கு மட்டுமே மாணவ, மாணவிகள் சத்தம் போட்டு ஓகே தெரிவித்தனர். ஹிந்திக்கு அனைவரும் அமைதியாக இருந்த போது, ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என கூறினார்.
அதனை தொடர்ந்து, எனக்கு கல்லூரி பருவத்தில் டிஎஸ்பி, லேப், HOD என்ற 3 வார்த்தைகளை கேட்டாலே தூக்கம் வராது. டிகிரி ஸ்டாப்பிங் பேப்பர் என சொல்லப்படும் அந்த பாடத்தில் என் வகுப்பில் நான் மட்டுமே தேர்ச்சி பெற்றேன். நான் கல்லூரியில் யாரையுமே ராக்கிங் செய்தது இல்லை. ஏனென்றால் என்னைதான் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ராக்கிங் செய்வார்கள்.
நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகாததற்கே இன்ஜினியரிங் தான் காரணம். உன்னால் முடியாது என்று சொன்னால்தான் நான் எழுவேன். உன்னால் முடியும் என்று சொன்னால் தூங்கிவிடுவேன். அதுபோலதான் 'நீ இந்திய அணிக்கு கேப்டன் ஆகலாம்' என நிறைய பேர் என்னிடம் சொன்னதால்தான் நான் தூங்கிவிட்டேன்” என பேசினார்.