ரூம்'ல தனியா அழுதுட்டு இருந்தேன் - யோசிக்காம ரோகித் செய்த செயல் - நெகிழ்ந்து போன அஸ்வின்

Ravichandran Ashwin Rohit Sharma Indian Cricket Team
By Karthick Mar 13, 2024 04:53 AM GMT
Report

தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த உதவியை அஸ்வின் உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

500 டெஸ்ட் விக்கெட்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி மாபெரும் சாதனையை படைத்தார்.

ashwin-recalls-rohit-sharma-helps-in-his-critical

ஆனால், அதே நேரத்தில் அவரது தாயாரின் உடல் பாதிப்படைய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக ஒரு நாள் மட்டும் அஸ்வின் போட்டியில் இல்லை. இந்த சம்பவம் குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசியது வருமாறு,

ரோகித் சர்மாவை வாட்டும் கெட்ட பழக்கம் - இப்படி ஒரு நபரை பார்த்ததே இல்லை - கோலி பளீச்!

ரோகித் சர்மாவை வாட்டும் கெட்ட பழக்கம் - இப்படி ஒரு நபரை பார்த்ததே இல்லை - கோலி பளீச்!

500-வது விக்கெட் வீழ்த்திய போது வீட்டில் இருந்து போன் வரும் என்று காத்திருந்தேன். யாருமே கூப்பிடல. நானே மனைவிக்கு போன் செய்த போது தான் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்தேன். மிகவும் சோகமாக கலங்கி போய் அறையில் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்தேன்.

ரோகித் செய்த செயல்..

என் போன் ரீச் ஆகாத நிலையில், வீட்டில் இருந்து மனைவி அணியின் பிஸியோதெரபிஸ்ட்'டிற்கு விஷயம் சொல்ல, கேப்டன் ரோகித் மற்றும் கொச் ராகுல் டிராவிட்'டிற்கு விஷயம் தெரிந்தது.

ashwin-recalls-rohit-sharma-helps-in-his-critical

உடனே அவர்கள் என்னுடைய பையுடன் வந்து, இப்பொது அம்மாவுடன் இருப்பது தான் முக்கியம் என்று கூறி, அனுப்பினார்கள். ரோகித் சர்மா, புஜாரா மூலம் தனியாக விமானம் ஒன்று ஏற்பாடு செய்ய நான் அம்மாவை வந்து சந்தித்தேன்.

ashwin-recalls-rohit-sharma-helps-in-his-critical

பயணம் முழுவதும் என்னைப் பற்றி அறிய ரோஹித் உடன் பயணித்த அணியின் பிசியோ கமலேஷை அழைத்து கொண்டே இருந்தார். ரோஹித்தின் செயலை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ரோகித் விசேஷமானவர். கேப்டனாக அவர் ஏதாவது பெரிய சாதனையை படைக்க இறைவனை பிரார்த்திப்பேன் அஸ்வின் உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.