நீ படிச்சா ஸ்கூல்ல நா ஹெட்மாஸ்டர் டா moment!! அஸ்வினிக்கு Mankading எச்சரிக்கை - அலறவிட்ட நெல்லை வீரர்!!
அஸ்வின் Mankading உலக அளவில் கவனம் பெற்றது.
அஸ்வின் Mankading
2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, பட்லரை mankading முறையில் அவுட் செய்து தலைப்பு செய்தியாக மாறினார் அஸ்வின். இது உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
பல கேள்விகளும், இது தொடர்பாக எழுப்பப்பட்டது. ஆனால், அதிகாரபூர்வ ICC rules'இல்லை இந்த சட்டம் இடம்பெற்றிருப்பதால், அதனை பெரிதாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சுவாரசியம்
அஸ்வின் - Mankading out ஒன்றிணைத்து போன ஒன்றாகவே அப்போதிலிருந்து மாறியது. இந்த சூழலில் தான், நடைபெற்று வரும் TNPL தொடரில் அஸ்வினை வீரர் ஒருவர் mankad முறையில் அவுட்டாக்க முயற்சித்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியதுள்ளது.
திண்டுக்கல் அணிக்காக விளையாடி வரும் அஸ்வினை, நெல்லை அணி வீரர் மோகன் பிரசாத் அவரை mankad செய்ய முயற்சித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
A Warning to Ravichandran Ashwin at the non-striker end in TNPL. ? pic.twitter.com/CMqwJxoiQz
— Johns. (@CricCrazyJohns) July 28, 2024