உலகில் மிக அழகிய பெண்ணுடன்.. நெகட்டிவிட்டிக்கு சரியான பதிலடி கொடுத்த அசோக் செல்வன்!
நடிகர் அசோக் செல்வன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அசோக் செல்வன்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அசோக் செல்வன், தமிழில் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே போன்ற ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனில் ஓ மை கடவுளே படம் பெரும் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.
இதில் இவருடன் நடித்த ரித்திகா சிங்குடன் கிசுகிசு ஏற்பட்டது. மேலும், இந்திய படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். அதனால் இவர்கள் நிஜனமான ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் ஹிட் ஆனது.
திருமணம்
இந்நிலையில், இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் 3வது மகளான கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமனம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கு அசோக் செல்வன் அளவிற்கு கீர்த்தி பாண்டியன் ஒன்றும் அழகில்லை என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு சில மீம்ஸ்களையும் பகிர்ந்து வந்தனர்.
இதற்கு பலர் எதிர்ப்புகளும் தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகர் அசோக் செல்வன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் " உலகில் மிக அழகிய பெண்ணுடன்" என்று பதிவிட்டுள்ளார். நெகட்டிவ் காமெண்ட்டுகளுக்கு சரியான பதிலடி கொடுத்த இவரது பகிர்வு வைரலாகி வருகிறது.