நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணனின் புகழும் இருக்கும் - வைகோ

Vaiko
By Thahir Aug 18, 2022 11:37 AM GMT
Report

நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணனின் புகழும் இருக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ புகழாரம் 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நெல்லை கண்ணன் இன்று பிற்பகல் காலமானார். அவரது உடல் நெல்லை டவுணில் உள்ள அம்பாள் சன்னதி தெருவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணனின் புகழும் இருக்கும் - வைகோ | As Long As Nelly Lasts His Fame Vaiko

தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் தான் சமய நிகழ்ச்சியாக இருந்தாலும் பட்டிமன்றமாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார்.

இந்த வீட்டிற்கு ராஜீவ் காந்தி வந்து உணவு அருந்தி விட்டு சென்றதாகவும் என்னிடம் தெரிவிப்பார் காமராஜரை தனது அரசியல் வாழ்வில் கொள்கையாகக் கொண்டு காங்கிரஸில் செயல்பட்டவர்.

அவரது இறப்பு என்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சமயம் இலக்கியம் பட்டிமன்றம் எதுவாக இருந்தாலும்,

அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆற்றல் மிக்கவராக இருப்பார் அரசியலில் அவருக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிடைக்காமல் சென்று விட்டாலும்,  நெல்லை மாவட்ட மக்களின் மனநிலையில் அவர் ஒருபோதும் மறைவதில்லை. 

இந்த இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் பெரிய இழப்பாக உள்ளது அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளேன் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்; பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்!