3வது முறையாக யு.எஸ் ஓபனில் சாம்பியன் -அர்னா சபலெங்கா அசத்தல்!
நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இதில் அர்னா சபலெங்கா தனது முதல் யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றார்.
டென்னிஸ்
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் பெலாரசின் சபலென்காவும் , அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். அப்போது முதல் செட்டில் ஒரு வரிசையில் சபலேன்கா நான்கு ஆட்டங்களை வென்ற பிறகு, 5-2 என்ற முன்னிலை பெற்ற பெகுலா 5-5 என கணக்கில் கைப்பற்றினார்.
இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய அர்னா சபலெங்கா முதல் செட்டையும், இரண்டாவது செட்டையும் 7-5 என கைப்பற்றினார். மேலும் இரண்டாவது செட்டின் தொடக்கமானது பெகுலாவுக்கு கடினமாக இருந்தது.
சுமார் ஒரு மணி நேரம், 53 நிமிடம் நீடித்த போட்டியில் சபலென்கா 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று, யு.எஸ்., ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்றார். தனது 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
அர்னா சபலெங்கா
இது குறித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற சபாலேங்கா கூறியதாவது: "இது சவாலாகவும் கடினமானதாகவும் இருக்கும் என்று எனக்குத் தெரியும். பெகுலா மிகவும் சக்திவாய்ந்தவர். தனது இரண்டாவது ஆட்டத்தில் நான் மீண்டும் போராடி வெற்றி பெற்றேன் என்று கூறினார்.
மேலும் தனது இரண்டு பயிற்சியாளர்களான மார்க் நோல்ஸ் மற்றும் மார்க் மெர்க்லின் உட்பட தனது அணிக்கு நன்றி தெரிவித்தார். ஏற்கனவே இரண்டு முறை (2023, 2024) ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.