முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்வது ஏன்? பின்னணி என்ன?
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வரானார்.
இந்நிலையில்தான் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் கைதானார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 13-ம் தேதி கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது.
அடுத்த முதல்வர் யார்?
ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால், செப்டம்பர் 17-ந் தேதி தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் தேர்தல் நடைபெற வேண்டும்.
ஆனால் முன்கூட்டியே நவம்பரிலும் தேர்தல் நடத்த பரிந்துரைப்போம். அப்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். டெல்லி புதிய முதல்வர் பதவிக்கான போட்டியில் மூத்த அமைச்சர் அதிஷி, கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால், கோபால் ராய் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.