வேண்டுமென்றே சுவீட் சாப்பிடும் கெஜ்ரிவால்; சிறையில் கொள்ள சதியா? குற்றச்சாட்டின் பின்னணி!
சிறையில் வேண்டுமென்றே மாம்பழம், இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால் என்று குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.
சுவீட் சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்
அரவிந்த கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இவ்வழக்கு தொடர்பாக அவர் டெல்லியில் உள்ள திகார் சிறைசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் அவரது ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி மாறுபடுவதாகக் கூறி அவருடைய மருத்துவரை சந்திக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், ‘ஒரு சர்க்கரை நோயாளி தனது ரத்த அளவை அதிகரிக்க வேண்டுமென்றே சிறையில் மாம்பழங்களை சாப்பிடுகிறார், அதுமட்டுமின்றி, இனிப்பு வகைகள், வெள்ளைச் சர்க்கரை கலந்த டீ ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறார்.இதுபோன்ற மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான காரணங்களை கெஜ்ரிவால் உருவாக்குகிறார்’என்று வாதிட்டார்.
குற்றச்சாட்டின் பின்னணி
இதற்கு கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், அவர் சாப்பிடும் உணவு, மருத்துவர் பரிந்துரைத்த உணவுகள்தான்,ஊடகங்களில் அவர்களுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் இதுபோன்று வெளியிடுவதாக அமலாக்கத்துறை மீது குற்றஞ்சாட்டினார்.
இதை தொடர்ந்து, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் சொல்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கு மிகப்பெரிய சதி நடக்கிறது என டெல்லி மாநில மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரை பேசியதாவது, பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது. வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்த முயற்சி செய்கிறார்கள். அவர் இனிப்புகள் சாப்பிடுவதாக கூறுவது பொய், கெஜ்ரிவால் செயற்கை இனிப்பை எடுத்து வருகிறார்.
சர்க்கரை அளவு குறைவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அல்லது ஏதேனும் சாக்லேட் எடுத்துச் செல்லுமாறு டாக்டர்கள்களால் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். கடந்த சில நாட்களாக அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300 mg/dl-க்கு அதிகமாக உள்ளது. ஆனால் திகார் ஜெயில் அதிகாரிகளால் இன்சுலின் மறுக்கப்படுகிறது. வீட வீட்டில் சமைத்த உணவை நிறுத்தி கெஜ்ரிவாலை கொல்ல சதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.