சட்டசபை தேர்தல்; முதல்வர் உட்பட பாஜக வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி வெற்றி!
சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் பெமா காண்டு உள்பட பா.ஜனதா வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
பாஜக வேட்பாளர்கள்
அருணாசல பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், அங்கு 2 மக்களவை தொகுதிகளுக்கும், 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
அதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், முதல்வர் பெமா காண்டு மற்றும் துணை முதல்வர் சவுனா மெய்ன் உள்பட பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் 10 தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
போட்டியின்றி வெற்றி
இதனால் அவர்கள் 10 பேரும் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளனர்.இதனை மாநில தேர்தல் அதிகாரி பவன் குமார் அறிவித்தார். மேலும், இந்த தொகுதிகளை தவிர்த்து எஞ்சியுள்ள 50 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் வருகின்ற தேர்தலில் வாக்குபதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வேட்புமனு வாபஸ் பெற்ற பிறகும், அருணாசல பிரதேசத்தில் உள்ள இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலில் சுமார் 14 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என பவன் குமார் கூறியுள்ளார்.