விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்... - ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
ஆறுமுக சாமி ஆணையம்
இந்த விசாரணையில், அப்பல்லோ மருத்துவர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டது. இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி புகழேந்தி கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பிடமும் ஏற்கனவே விசாரணை நடந்தது. இதனையடுத்து, இந்த விசாரணை நிறைவு அடைந்ததாகவும், இதனால் அடுத்தகட்டமாக விசாரணை அறிக்கையை நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
கால அவகாசம்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஏப்ரல் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஜூன் 24ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது மேலும் 1 மாதம், 7 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஏற்கெனவே 12 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.