முடிவுக்கு வந்த விசாரணை : ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு செய்த ஆறுமுகசாமி ஆணையம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது..
.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை மேற்க்கொண்டது , இதில் கடந்த சில நாட்களாக அப்பல்லோ மருத்துவர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி புகழேந்தி கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பிடமும் ஏற்கனவே விசாரணை நடத்திருந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றுள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்தகட்டமாக விசாரணை அறிக்கையை நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்ய உள்ளது.