செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி - கொழுப்பு, எலும்பு கிடையாதாம்!
அமெரிக்காவில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செயற்கை இறைச்சி
விலங்குகள் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை வைத்து ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்படும் இறைச்சியானது வளர்ப்பு இறைச்சி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோழி உயிரணுக்களில் இருந்து நேரடியாக வளர்க்கப்படும் இறைச்சியை விற்க அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தொடர்ந்து, விற்கும்போது இறைச்சி ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களிடம் தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுமதி
மேலும், கோழியின் செல்களை பிரித்தெடுத்து அவற்றுடன் சில சத்துப் பொருள்களை கலந்து ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி உருவாக்கப்படுகிறது. கொழுப்பு, எலும்பு இல்லாத இந்த இறைச்சிக்கான உற்பத்தி செலவு அதிகமாக இருக்கும் நிலையிலும்,
அதனை வாங்க பிரபல உணவகங்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
முன்னதாக, ஏற்கனவே சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஈட் ஜஸ்ட் நிறுவனம் தான் சிங்கப்பூரில் செயற்கை இறைச்சியை விற்கிறது.